கடவுளுடன் ஐக்கியமாவோம்
UPDATED : ஜூன் 01, 2014 | ADDED : ஜூன் 01, 2014
* முதலில் அடக்கம் வெளியில் உண்டாக வேண்டும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள்ளும் சித்திக்கத் தொடங்கும். * மனம் எதை தீவிரமாக இடைவிடாமல் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துள்ள நாம், முடிவில் அவரிடமே ஒட்டிக் கொண்டு ஐக்கியமாக முயல வேண்டும்.* பிறர் துன்பத்தைப் போக்க நம்மால் ஆன உதவியைச் செய்து வாழ்வது அவசியம்.- காஞ்சிப்பெரியவர்