ஒருவருக்கொருவர் உதவலாமே!
* தயை என்பது ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டிய உயர்ந்த குணம். * தானம் செய்தது பற்றி வெளியில் சொல்ல வேண்டாம். நாலு பேருக்கு நாம் தானம் செய்ததை தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதுவும் கூட தோஷம் தான்.* நாம் செய்யும் பாவம் முழுவதையும் கருணையோடு மன்னிக்கும் இறைவன், சிலரை மட்டும் கடுமையாக வதைக்கிறான் என்றால், அவர்கள் செய்த பாவம் ரொம்ப பயங்கரமாக இருந்திருக்க வேண்டும். * காகம் எங்கேயோ பழத்தை சாப்பிட்டுவிட்டு, நம் தோட்டத்தில் வந்து எச்சமிடுகிறது. அந்தப்பழத்தின் கொட்டை இங்கே நம் வீட்டுத் தோட்டத்தில் விழுந்து மரமாகிறது. அந்தக் காக்கை நமக்கு ஒரு உதவி செய்து உள்ளது. நாய் காவல் காக்கிறது, குதிரையை வண்டியில் கட்டி சவாரி செய்கிறோம், பசு நமக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளது. இவ்வாறு மிருகங்களிடம் கூட உதவி பெற்றுவிட்டு, மனித ஜென்மம் எடுத்துள்ள நாம், இன்னொரு மனிதனுக்கு உதவி செய்யாமல் இருப்பது பாவம். - காஞ்சிப்பெரியவர்