மனதால் புண்ணியம் செய்வோம்
* வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்து இருக்கிறோம். அவற்றை அதே வாக்கு, மனம், உறுப்புகளால் புண்ணியம் செய்து கரைத்துவிட வேண்டும்.* அவரவருக்குரிய கடமையை நியதியோடு பின்பற்றினால் மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை உண்டாகும்.* குணத்தினாலும், உடலாலும் சேர்ந்து ஒன்றை ஒன்று தூய்மைப்படுத்திக் கொள்ளும் முறையில் செயல் செய்ய வேண்டும்.* தனக்காக எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிப்பது தான் தனக்கு மிஞ்சிய தர்மமாகும்.* மனம் நாலாதிசைகளிலும் வெறிநாய் போல் ஓடாமல் இருக்கும் வகையில் கட்டுப்படுத்தி பழகுங்கள்.* மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்களோ, அங்கிருந்தே அவர்களை முன்னுக்கு அழைத்துச் செல்ல வேண்டியது தலைவர்களின் கடமை.* துயரம் எங்கு காணப்படுகிறதோ, அங்கு நாமே வலுவில் சென்று அந்தத் துயரத்தை நீக்க நம்மால் முடிந்ததை செய்ய முயற்சிக்க வேண்டும்.- காஞ்சிப்பெரியவர்