வாழ்ந்து காட்ட வேண்டும்
UPDATED : மார் 11, 2013 | ADDED : மார் 11, 2013
* போட்டியும் பொறாமையும் மனதில் இருக்கும் வரை யாருக்கும் எதிலும் மனநிறைவு உண்டாவதில்லை. * தர்மம், நீதி இரண்டும் சேர்ந்தது தான் பண்பு. பண்பில்லாதவன் மனிதநிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான். * எந்த விஷயத்தையும் அலட்சியத்துடன் அணுகக்கூடாது. அக்கறையுடன் செய்யும் செயல் தான் வெற்றி பெறும்.* மனம் இடைவிடாமல் எதை தீவிரமாகச் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறிவிடும்.* எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவது தான் முக்கியமானது.* வெளியில் அடக்கமாக நடந்தால், உள்ளுக்குள் மன அடக்கம் வந்து விடும்.* மனிதன் எந்தநிலையில் இருந்தாலும் கடவுளின் அருட்குணங்களைக் கேட்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.* கடவுளை நினைத்துச் செய்யும் எந்த செயலுக்கும் பயன் உண்டு. அறியாமல் செய்தாலும் கூட அதற்கும் பலன் கிடைத்துவிடும்.- காஞ்சிப்பெரியவர்