நிம்மதிக்கான மருந்து
UPDATED : பிப் 10, 2015 | ADDED : பிப் 10, 2015
* எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் ஒருவனுக்கு பெருமை.* கோபத்தால் மனிதன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்கிறான். சாந்த குணமே உயர்ந்தது.* போட்டி எண்ணம் இருக்கும் வரையில் மனிதனுக்கு மனநிறைவு உண்டாகாது.* எளிமையும், உழைப்பும் மனதிற்கு நிம்மதியளிக்கும் அருமருந்துகள் என்றால் மிகையில்லை. * பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ண வேண்டாம். தர்மத்தை உடனே செய்து விடுங்கள்.-காஞ்சிப்பெரியவர்