உத்தம குணம் வேண்டும்
UPDATED : நவ 20, 2014 | ADDED : நவ 20, 2014
* துன்பம் வந்தால் மட்டுமே கடவுள் மீது பக்தி செலுத்துவது கூடாது. இன்பத்திலும் நன்றியுணர்வோடு பக்தி செலுத்த வேண்டும்.* தானத்தில் அன்னதானமே விசேஷம். இதில் மட்டுமே ஒருவரை முழுமையாக திருப்திப்படுத்த முடியும்.* நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பதே உத்தமமான குணம்.* நம்முடைய புத்தி,ஆற்றல் இரண்டையும் உலக நன்மைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்.- காஞ்சிப்பெரியவர்