உள்ளூர் செய்திகள்

சொல்லாதே! செயலில் இறங்கு!

* கள்ளம் கபடம் இல்லாத குழந்தையின் மனம் கடவுளுக்கு ஒப்பானது. உபநிஷதமும் குழந்தையாக இரு என்று நமக்கு போதிக்கிறது. * சொல்வதைக் காட்டிலும் அதைச் செயலில் வெளிப்படுத்துபவனே அறிவாளி.* எதை தீவிரமாகச் சிந்தித்தாலும் அதுவாகவே மாறிவிடும் தன்மை மனதிற்கு இருக்கிறது.* யாரையும் அலட்சியமாக எண்ணுவது கூடாது. கடவுளின் படைப்பில் அனைவரும் உயர்ந்தோரே.* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே போவதால் வாழ்வில் நிறைவு உண்டாகாது.- காஞ்சிப்பெரியவர்