மனவலிமைக்கு வழி
UPDATED : ஜூன் 30, 2014 | ADDED : ஜூன் 30, 2014
* நாம் வாழும் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. நம் மனம் என்னும் வீடும் சுத்தமாக இருக்க வேண்டும்.* பாவத்தை ஒரே கணத்தில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு இருக்கிறது. அதனால் இயன்ற அளவு நாமஜபத்தில் ஈடுபடுங்கள். * பூலோகத்தில் நம் வாழ்வு ஒருநாள் முடிந்து விடும். அதற்குள் பக்தி மூலம் நம்மை பக்குவப்படுத்த முயல வேண்டும்.* தியானத்தில் உள்ளம் தூய்மை அடைவதோடு, பாவத்தில் ஈடுபடாத வலிமையும் பெறுகிறது.- காஞ்சிப்பெரியவர்