உள்ளூர் செய்திகள்

நிம்மதி நம் கையில்!

* பண்டிதர் முதல் பாமரர் வரை, 'எதிலும் கணக்காயிருக்கணும்' என்று அடிக்கடி சொல்கிறார்கள். இது பணத்தை மட்டும் குறிப்பதல்ல, பேச்சையும் குறிக்கிறது* பேச்சைக் குறைத்தால், நேரத்தை மிச்சப்படுத்த முடியும். நிம்மதியை வரவழைத்துக் கொள்ள முடியும்.* பண விஷயத்தில் கணக்காக இருக்க விரும்புகிறோம். வியாபாரத்தில் பேரம் பேசி சாமர்த்தியமாக வாங்குவது மட்டுமே கணக்காக இருப்பதாகாது.* நியாயமான வழியில் பணம் சம்பாதிப்பதும், அதை பயனுள்ள வழியில் செலவழிப்பதுமே போதுமானது.- காஞ்சிப்பெரியவர்