குடும்பத்திற்கு முன்னுரிமை
UPDATED : மே 22, 2015 | ADDED : மே 22, 2015
* பிதுர் வழிபாட்டிற்கு சிரத்தையும் (அக்கறை) தெய்வ வழிபாட்டிற்கு நிஜமான பக்தியும் அவசியம்.* பெரியவர்களுக்கு அடங்கி நடந்தால் மனஅடக்கம் தானாக வந்துவிடும்.* மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை உடனடியாக செயல்படுத்தி விடு.* பொறாமை இருக்கும் வரை, மன நிம்மதி இருக்காது.* குடும்பத்தின் தேவையை நிறைவேற்று. சமுதாய சேவையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.* பொருட்களை அதிகப்படுத்திக் கொள்வதால், வாழ்க்கைத் தரம் உயர்ந்து விடுவதில்லை.-காஞ்சிப்பெரியவர்