உள்ளூர் செய்திகள்

பத்து நிமிடம் போதுமே!

* தினமும் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபாடு நடத்த வேண்டும். இதற்காக பத்து நிமிடம் ஒதுக்கினால் போதும். * புகழுக்காக எந்த செயலிலும் ஈடுபடுவது கூடாது. புகழை விரும்பும் மனிதன் அகங்காரத்திற்கு ஆளாக நேரிடும். * நல்ல செயல்களைத் தர்மம் என குறிப்பிட்டாலும், பிறருக்கு கொடுத்து உதவுவதையே தர்மம் என சிறப்பாகச் சொல்கிறோம். * தர்மத்தை தமிழில் 'அறம்' என்று சொல்வர். ஆத்திச் சூடியில் 'அறம் செய விரும்பு' என்பது தான் முதலிடம் வகிக்கிறது. -காஞ்சிப்பெரியவர்