திருநீறில் மருந்திருக்கு!
* அபிஷேகப்பிரியனான பரமேஸ்வரன் விபூதிபிரியனாக உள்ளான். 'காடுடைய சுடலைப் பொடி பூசி' என்று தேவாரத்தின் முதல் பாட்டிலேயே ஞானசம்பந்தக் குழந்தை சொல்லியிருக்கிற மாதிரி, சிவன் இட்டுக் கொள்வது மயானத்தில் சவங்களை எரித்துப் பெறுகிற சாம்பலே திருநீறு. * கோமய உருண்டைகளைப் புடம் போட்டு விபூதி தயார் செய்வர். விபூதியை விடப் பவித்ரமானது ஒன்றும் கிடையாது. சம்பந்த மூர்த்தி சுவாமிகளின் 'மந்திரமாவது நீறு' என்ற திருநீற்றுப்பதிகத்தை பார்த்தால் போதும். அந்த திருநீற்றுக்கு என்னவெல்லாம் மகிமை இருக்கிறதென்று தெரியும்.* 'பஸ்மஜாபாலோபநிஷத்' என்ற உபநிஷத்தில் பரமேஸ்வரனே கோமயத்தில் இருந்து எப்படி விபூதி செய்வது என்று விளக்கமாகச் சொல்லி, அது சர்வ பாவங்களையும் போக்கி மோக்ஷம் தருவது என்று சொல்வதாக இருக்கிறது.* நம்மைச் சுத்தம் செய்து கொள்வதற்கு இரண்டு வழி தான் இருக்கிறது. ஒன்று ஸ்நானம் பண்ணுவது. இன்னொன்று விபூதி அணிந்து கொள்வது!- காஞ்சிப்பெரியவர்