கோபத்தை தவிர்க்க வேண்டும்
UPDATED : ஜூலை 20, 2016 | ADDED : ஜூலை 20, 2016
* அன்பால் பிறரது குறைகளைத் திருத்த முயலுங்கள். நான் மிகச் சிறியவன் என்று மனதிற்குள் எப்போதும் எண்ணுங்கள்.* மனதிற்கு தீங்கு செய்யும் கோபத்தை தவிர்க்க வேண்டும். பொருளற்ற பயனில்லாத விஷயங்களைப் பேசாதீர்கள்.* பாவம் தீர அன்றாடம் சிறிது நேரம் தியானம் செய்யுங்கள். எளிமையாக வாழ்வதே நிம்மதி என்பதை உணருங்கள்.* தேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவுக்கு தான, தர்மத்தில் ஈடுபடுங்கள்.- காஞ்சிப்பெரியவர்