மனஉறுதிக்கு வழி
UPDATED : ஏப் 01, 2015 | ADDED : ஏப் 01, 2015
* அன்பால் பிறரை திருத்துவதே சிறந்தது. அதுவே நிலையான பலன் தரும்.* தேவையை அதிகப்படுத்துவதால் மட்டும் வாழ்க்கைத் தரம் உயராது. * போதும் என்ற மனநிலையோடு வாழ்பவர்கள் பிறருக்கு தர்மம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள்.* எதைக் காப்பாற்றாவிட்டாலும் 'நா காக்க' என்று பேசுவது பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.* மவுனம் காத்தல், விரதமிருத்தல் இரண்டாலும் நாவிற்கு ஓய்வும், மனதிற்கு உறுதியும் உண்டாகும்.-காஞ்சிப்பெரியவர்