உள்ளூர் செய்திகள்

தெய்வம் என்றால் என்ன?

* மனதால் கடவுளை நினை. வாக்கால் அவன் திருநாமங்களைக் கூறு. உடம்பால் வழிபாட்டைச் செய். * சரியான தர்மநெறியைப் பின்பற்றி வாழ்வை உயர்த்திக் கொள்ள வேண்டும். தப்பு விஷயங்களில் ஈடுபட்டால் துன்பத்தில் சிக்கிக் கொள்ள நேரிடும்.* உழவுத் தொழிலால் வயிறு நிரம்புகிறது. நாடகம், நாட்டியம் போன்ற கலைகளால் வயிற்றுக்கு பலனில்லா விட்டாலும், மனதிற்கு நல்ல உணர்வை ஊட்டுவதாக அமைய வேண்டும். * உலகிலுள்ள அத்தனை பொருட்களையும் படைத்து ஒழுங்குடன் நடத்தி வருகின்ற பெரிய அறிவு ஒன்று இருக்கிறது. அதையே தெய்வம் என்று நம் அழைக்கிறோம்.* கடவுளை முழுமையாக அறிந்து விட்டால், மனதில் இருக்கும் பேராசை, கோபம், வெறுப்பு போன்ற தீய குணங்கள் அடியோடு அகன்று விடும். - காஞ்சிப்பெரியவர்