பெற்றோரை நேசிப்போம்
UPDATED : ஜூலை 10, 2014 | ADDED : ஜூலை 10, 2014
* சுயதேவைகளை தானே செய்து கொள்வதில் தான் உண்மையான கவுரவமும், மனநிறைவும் உண்டாகும்.* பெற்றோர், சகோதரருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து ஒருபோதும் தவறக்கூடாது.* 'தன்னைப் பெற்ற தாயார் 'கிண்ணிப்பிச்சை எடுக்கிற போது கோதானம் பண்ணினானாம்' என ஒருவன் பெயரெடுப்பது நல்லதல்ல. * குடும்பத்தோடு ஊராருக்கும் நம்மால் முடிந்த நன்மையைச் செய்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும்.- காஞ்சிப்பெரியவர்