உள்ளூர் செய்திகள்

பலனறிந்து பணியாற்றுங்கள்

* விருப்பு வெறுப்பின்றி செய்யும் செயலால் ஒழுக்கமும், மனத்தூய்மையும் உண்டாகும். * தன் தேவையைக் குறைத்து எளிமையாக வாழும் போது சேமிக்க இடமுண்டு. அதைப் புண்ணிய காரியத்துக்காக செலவழிப்பது தான் தர்மம். * விவசாயி பயிரிடுவதன் பலன் தானியத்தை அறுவடை செய்வது தான். அது போல செயலின் முடிவான பலனைத் தெரிந்து கொண்டால் ஆர்வத்துடன் பணியாற்றலாம். * எங்கு சென்றாலும் அங்கே சந்தோஷத்தை அழைத்துச் செல்ல வேண்டும்.* துன்பம் நேர்ந்து விட்டால் வலிந்து சென்று நம்மால் ஆன உதவியைச் செய்யவேண்டும். இரக்க சிந்தனை இல்லாவிட்டால் மனிதனாகப் பிறந்ததில் அர்த்தம் இல்லை.* பொறுமை என்பது நோய், வறுமை, விபத்து ஆகியவற்றை சகித்துக் கொள்வது மட்டுமல்ல. மற்றவரின் குற்றங்குறைகளை மன்னிப்பதும் சேர்த்துத் தான். - காஞ்சிப்பெரியவர்