உறுதியான உள்ளம்
UPDATED : டிச 20, 2013 | ADDED : டிச 20, 2013
* உயர்ந்தவர்களின் நட்பு, உண்மையானதாக நாளும் வளர்ந்து கொண்டே இருக்கும். * ஏமாற்றிப் பிழைப்பவன், தன்னைத் தானே புகழ்ந்து மகிழ்பவன், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுபவன் மூவரும் பைத்தியக்காரனுக்குச் சமமானவர்கள்.* மனதில் உறுதி மிக்கவனிடம் மட்டுமே துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் பலம் இருக்கும். அவனே சகலமும் சாதிப்பான்.* இனிமையாகப் பேசுங்கள். மற்றவர்களைப் புண்படுத்தும் கடுஞ்சொற்களைப் பேசக்கூடாது. அளவாகப் பேச வேண்டும்.- மகாவீரர்