நல்லவரோடு பழகுங்கள்
UPDATED : மே 10, 2015 | ADDED : மே 10, 2015
* உண்மையைப் பேசுங்கள். அது உங்கள் வார்த்தைகளைப் பாதுகாக்கும்.* உள்ளத்தில் தயவு இருந்தால், கடவுளின் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.* பசித்தோர் முகம் கண்டால் இரக்கம் கொள்ளுங்கள். ஜீவகாருண்யமே பேரின்பத்தின் திறவுகோல்.* உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றுமாக இருப்பவர்களின் உறவை நாட வேண்டாம். * மன ஒருமையுடன் கடவுளின் திருவடியை வணங்கும் நல்லவர்களோடு பழகுங்கள்.* கடவுளைச் சரணடைந்தால் பொய், பொறாமை போன்ற தீய பண்புகள் அகன்று விடும்.-வள்ளலார்