உயர்ந்த லட்சியம் வேண்டும்
UPDATED : அக் 20, 2013 | ADDED : அக் 20, 2013
* நடந்து முடிந்ததைக் குறித்து வருந்தாதே. எதிர்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் உனது சொல்லும் சிந்தனையும், செயலும் அமையட்டும்.* தீய எண்ணங்களும் செயல்களும் புலிகளைப்போல் உன் மேல் பாய்வதற்கு தயாராக இருக்கின்றன. அதே நேரம் நல்ல எண்ணங்களும் செயல்களும் நூறாயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னைப் பாதுகாப்பதற்கும் தயாராக உள்ளன. இதில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது உனக்கே தெரியும்.* ஏன்? எதற்கு என்ற ஆராய்ச்சியை விட, செயலில் ஈடுபடுவதே உசிதமானது. நம்பிக்கையுடன் உனது செயல்களைச் செய்தால், ஆண்டவன் நம்மை படைத்த குறிக்கோள் நிறைவேறிவிடும்.* உயர்ந்த லட்சியத்துடன் வாழ்பவன் ஆயிரம் தவறுகளை செய்யலாம். ஆனால் லட்சியமின்றி வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.- விவேகானந்தர்