விடாமுயற்சி வேண்டும்
UPDATED : ஜூன் 24, 2015 | ADDED : ஜூன் 24, 2015
* நீங்கள் ஒளிரும் தெய்வீக நட்சத்திரமாக இருக்கிறீர்கள். உயர்ந்தவை எல்லாம் உங்கள் காலடியில் கிடக்கின்றன.* நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதை மிகவும் கரடுமுரடானதாக இருக்கும்.* பிறரைக் குறை கூறுவதாலும், சண்டை, சச்சரவில் ஈடுபடுவதாலும் பிரச்னை தீருவதில்லை.* எந்த விஷயமும் எதிர்ப்புக்கு பின்னரே ஏற்கப்படும்.* பகைமை உணர்வை வெளிப்படுத்தினால், அது வட்டியும் முதலுமாக உன்னிடமே திரும்பி வரும்.* விடாமுயற்சியும், பயிற்சியும் இருந்து விட்டால் எந்த துன்பத்தையும் கடந்து வாழ்வில் சாதிக்க முடியும்.-விவேகானந்தர்