உண்மைக்குத் தலைவணங்கு
UPDATED : டிச 30, 2014 | ADDED : டிச 30, 2014
* லட்சியத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுங்கள். உங்களுக்கு ஆதரவான காலம் வந்தே தீரும். * கற்புநெறியில் இருந்து சமுதாயம் விலகி விட்டால் அந்த இனத்திற்கே அழிவு காலம் வந்து விட்டதாக அர்த்தம். * சுயநலமற்ற சேவை செய்பவன் ஆண்டவனுக்கே சேவை செய்பவனாகக் கருதப்படுவான்.* உண்மை எதற்கும் தலை வணங்காது. சமுதாயம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும். * நல்லொழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். முன்னேறுவதற்கு அதைவிடச் சிறந்த வழியில்லை. - விவேகானந்தர்