மனதை ஒருமுகப்படுத்து!
UPDATED : மே 31, 2015 | ADDED : மே 31, 2015
* மனதை ஒருமுகப்படுத்த பழகி விட்டால், உலகமே நமக்கு கட்டுப்பட்டு விடும்.* கல்வி என்பது வெறும் புள்ளி விபரத்தைச் சேகரிப்பதல்ல. அது மன தைரியத்தை வழங்குவதாக அமைய வேண்டும்.* வெறும் பாடம் சொல்லித் தந்தால் போதாது. நல்லொழுக்கம், பிறருக்கு உதவும் மனப்பான்மையை கற்றுத்தர வேண்டும்.* ஒருவன் முழுமனிதன் என்ற அந்தஸ்தைப் பெற வேண்டுமானால் அவனுக்கு கல்வி அவசியம்.* முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள். எஜமான் ஆகும் தகுதி, தானாகவே வந்து விடும்.-விவேகானந்தர்