நற்செயலில் ஈடுபடு
UPDATED : மார் 02, 2016 | ADDED : மார் 02, 2016
* நமது பெருமையை பறைசாற்றுவதை விட உலகிற்கு நன்மை செய்வது வாழ்வின் குறிக்கோளாக இருக்கட்டும்.* பொறுமையைப் பின்பற்றினால் உலகம் உங்கள் காலடியில் கிடக்கும். பூமியைப் போல பொறுமையுடன் வாழுங்கள்.*கீழ்ப்படிதலை அறிந்தவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெறுவான்.* இடைவிடாமல் பணியில் ஈடுபடுங்கள். அதற்காக அடிமையாகப் பணியாற்றக்கூடாது.* கடவுளை தந்தையாக ஏற்றுக் கொண்ட நாம், சக மனிதர்களை உடன்பிறந்த சகோதரர்களாக கருதுவது அவசியம்.-விவேகானந்தர்