ஒவ்வொன்றிலும் கடவுள்
UPDATED : செப் 30, 2015 | ADDED : செப் 30, 2015
* கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார்.* மக்களுக்கு சேவை செய்பவனே உண்மையில் கடவுளுக்கு சேவை செய்பவன் ஆகிறான்.* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியை சிதற விடக்கூடாது. அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்.* ஒருவர் எதைப்பெறுவதற்கு தகுதி உடையவராக இருக்கிறாரோ, அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்த இந்த உலகத்தில் எந்த சக்தியாலும் முடியாது.விவேகானந்தர்