உள்ளூர் செய்திகள்

சூளுரைப்போம் வாருங்கள்!

* துன்பப்படும் ஒவ்வொரு மனிதனும் கடவுளின் பிரதிநிதி. அவர்களின் துன்பத்தைப் போக்குவது நம் கடமை.* வெறுப்பினால் மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான். அன்பு தான் வாழ்வின் அடிப்படை நியதி.* மன மாசு இல்லாதவர்கள் இப்பிறவியிலேயே கடவுளை அடையும் பேறு பெறுகிறார்கள்.* 'எனக்கான விதியை நானே வகுத்துக் கொள்வேன்' என்று மன திடத்துடன் தினமும் சூளுரையுங்கள்.* முதலில் உங்களிடம் நம்பிக்கை வையுங்கள். அதன் பிறகே கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள்.- விவேகானந்தர்