உள்ளூர் செய்திகள்

நேர்வழியில் நடப்போம்

* கிடைக்கும் பலனில் மட்டும் கருத்தைச் செலுத்த வேண்டாம். அதை அடையும் வழியிலும் நேர்மை இருக்கட்டும்.* எந்தச் செயலிலும் கைம்மாறு கருதாமல் பொதுநலத்துடன் ஈடுபடுங்கள். அதுவே உண்மையான இன்பம். * நன்மையைப் போல தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக் கொள்ள முடியும்.* உலக இன்பம் மட்டுமே வாழ்வின் நோக்கம் அல்ல. கடவுளைப் பற்றிய ஞானமே பிறவிப்பயன்.* ஏளனம் செய்பவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். கொண்ட லட்சியத்தில் உறுதியோடு ஈடுபடுங்கள். - விவேகானந்தர்