வாழ்வு உங்கள் கையில்!
UPDATED : ஆக 10, 2014 | ADDED : ஆக 10, 2014
* இதயப்பூர்வமாகச் செய்யும் நல்ல விஷயங்களுக்கு இறையருள் எப்போதும் துணைநிற்கும்.* உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கும் விதத்தில் துணிவுடன் எழுந்து செயல்படுங்கள்.* விஞ்ஞான அறிவு மட்டும் ஒருவருக்கு இருந்தால் போதாது. மெய்ஞானமும் வாழ்வின் வளர்ச்சிக்கு அவசியமானது.* யாருடைய நம்பிக்கையையும் கலைப்பது கூடாது. முடியுமானால், அதற்கும் மேலான ஒன்றை கொடுக்க முயலுங்கள்.- விவேகானந்தர்