உள்ளூர் செய்திகள்

விதியை நீயே வகுத்துக்கொள்

* முட்டாள் விதியை நம்புகின்றான். ஆற்றல் மிக்கவனோ தன் விதியை தானே வகுத்துக் கொள்கிறான்.* வெறுப்பு தன்னைத் தானே அழித்துக் கொள்ளத் தூண்டுகிறது. அன்பு தன்னை மட்டுமில்லாமல் தன்னைச் சார்ந்தவர்களையும் வாழ வைக்கிறது.* நாம் நம்மைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே உண்மையான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.* எல்லா உயிர்களையும் நேசியுங்கள். துன்பப்பட்டு வருந்துவோர் மீது பரிவு காட்டுங்கள். பிறர் குற்றத்தை பொறுத்துக் கொள்ளுங்கள்.-விவேகானந்தர்