தியாக உள்ளம் வேண்டும்
UPDATED : பிப் 27, 2014 | ADDED : பிப் 27, 2014
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் மாற்றுவதே ஆன்மிகத்தின் பணி.* மிருகம், மனிதன், தெய்வம் ஆகிய மூன்று குணங்களும் சேர்ந்த கலவையாக மனிதன் இருக்கிறான்.* மரணம் வருவது உறுதியாக இருக்கும் போது, நல்ல ஒரு செயலுக்காக நம் உயிரை விடுவது மேலானது.* வெற்றி தோல்வியைப் பற்றிய சிந்தனை வேண்டாம். தியாக உள்ளத்துடன் சேவை செய்வதில் இறங்குங்கள்.* எண்ணத்தைப் பொறுத்தே உலகத்தை அளக்கிறோம். அழகும், அவலட்சணமும் மனதில் தோன்றும் எண்ணத்தின் வெளிப்பாடே.விவேகானந்தர்