உள்ளூர் செய்திகள்

அமைதியும் ஆண்மையும்

* இறைவன் தான் நமக்கு உதவி செய்ய முடியுமே தவிர, இறைவனுக்கு நம்மால் உதவ முடியாது. எனவே, இறைவனுக்கு உதவுகிறேன் (இறைப்பணி செய்கிறேன்) என்ற சொல்லை உள்ளத்திலிருந்து நீக்கி விடுங்கள்.* நாய்க்குட்டிக்கு சோறு வழங்கும் போது, அந்த நாயையும் கடவுளாகப் பாவித்து வழிபடுங்கள். ஏனெனில், நாயினுள்ளும் கடவுள் இருக்கிறார். * ஏழைகள், நோயாளிகள், பலவீனர்களிடம் இறைவனை காண்பவரே உண்மையில் அவரை வழிபடுகிறவர் ஆவார். * கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடி கொண்டு இருக்கிறார் என்பதால், மக்களுக்கு சேவை செய்பவன், கடவுளுக்கே சேவை செய்பவன் ஆகிறான்.* அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள்.* பெறத் தகுதியுடையவர், எந்த பொருளாக இருந்தாலும் அதைப் பெற்றே தீருவார். அதை தடுக்கும் சக்தி, உலகில் எங்கும் இல்லை.* உலகில் ஒரே ஒருவனின் இதயத்திற்காவது சிறிதளவு இன்பமும், மகிழ்ச்சியும் அளிக்க முடியுமானால் அது மட்டுமே நிஜமான சேவை.- விவேகானந்தர்