வழிகாட்டும் தெய்வம்
UPDATED : ஜூலை 12, 2015 | ADDED : ஜூலை 12, 2015
* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் அளிக்கும் பொருள் உலகத்தில் இருப்பதாக தெரியவில்லை.* தவறுகள் வழிகாட்டும் தெய்வங்கள். அவையே உங்களைச் சீர்திருத்தி வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன.* பெற்றுக் கொள்வதில் பெருமை இல்லை. கொடுப்பவனே வாழ்வில் பேறு பெற்றவன்.* மன ஒருமையுடன் பணி செய்பவர்கள் என்றென்றும் அழியாத சிறப்பை பெறுகிறார்கள்.* எதற்காகவும் அழாதீர்கள். அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அடையாளம்.-விவேகானந்தர்