பெருமைக்குரியவர் யார்?
UPDATED : மே 04, 2016 | ADDED : மே 04, 2016
* கடவுளால் தான் கோவிலுக்கு மகிமை உண்டாகிறது. கோவிலால் கடவுளுக்கு பெருமை உண்டாவதில்லை.* அறிவு, அறியாமை இரண்டையும் கடந்தால் ஒழிய கடவுளை அறிய முடியாது.* மனதில் எப்போதும் போராட்டம் நடக்கிறது. அதை அடக்கியாளக் கற்றுக் கொண்டால் வாழ்வு சிறக்கும்.* பாராட்டிற்கும், பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான செயல் எதையும் சாதிக்க முடியாது.* இயற்கைக்கு பணிந்து போக வேண்டாம். அதை வெல்லவே நாம் மனிதனாகப் பிறந்திருக்கிறோம்.- விவேகானந்தர்