உள்ளூர் செய்திகள்

5 நல்ல விஷயங்கள்

''எவன் அல்லாஹ்வின் திருமறையைப் பின்பற்றுகின்றானோ அவன் இம்மையிலும் வழிகெட மாட்டான்; மறுமையிலும் நஷ்டம் அடைய மாட்டான்'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்கள் மேலும் கூறும் போது, ''திருக்குர்ஆனில் ஐந்து விஷயங்கள் உள்ளன. அவை என்ன தெரியுமா?1. ஹலால்(அனுமதிக்கப்பட்டது) 2. ஹராம் (விலக்கப்பட்டது 3. முஹ்கம் (தெளிவான மொழிநடை கொண்ட வசனங்கள்) 4. முதஷாபிஹாத் (மறைவான விஷயங்களான சுவர்க்கம், நரகம், அர்ஷ் போன்றவற்றை உவமானமாகக் குர்ஆன் எடுத்துரைக்கும் வசனங்கள்) 5. உதாரணங்கள்.நீங்கள் ஹலாலை (அனுமதிக்கப்பட்டதை) ஹலாலாகக் கருதுங்கள்; ஹராமை (விலக்கப்பட்டதை) ஹராமாகக் கருதுங்கள்; (திருக்குர்ஆனில் கொள்கைகளும் சட்டங்களும் அறிவுறுத்தப் பட்டுள்ள வசனங்களான) முஹ்கமின்படி செயல்படுங்கள்! (மறைவான விஷயங்களான சுவர்க்கம், நரகம், அர்ஷ் போன்றவற்றை உவமானமாகக் குர்ஆன் எடுத்துரைக்கும் வசனங்களான) முதஷாபிஹின் மீது நம்பிக்கை வையுங்கள்! (அதனைத் துருவி ஆராய்வதில் ஈடுபடாதீர்கள்!) (முந்தைய சமுதாயங்கள் அழிந்து மடிந்தது பற்றிய படிப்பினை தரும் வரலாறுகளின்) உதாரணங்களிலிருந்து படிப்பினை பெறுங்கள்!'' என்றார்கள்.