நல்லதைச் செய்யுங்கள்
UPDATED : நவ 09, 2020 | ADDED : நவ 09, 2020
* இன்று செய்யும் நன்மைகளே நாளை நற்பலன் தரும்.* எதுவும் தானாக நடப்பதில்லை. முயற்சித்தால் மட்டுமே கிடைக்கும். * தொழுகை இறைவனின் அருளைப் பொழியச் செய்யும். * எப்போதும் அடக்கமுடன் இருப்பவரே நற்குணம் கொண்டவர். * வயதுக்கு ஏற்ப அதிகமான நற்செயல்களை செய்பவரே சிறந்தவர்.* உங்களை நல்லவர் என பக்கத்து வீட்டுக்காரன் சொல்வானேயானால் நீங்கள் நல்லவரே. * ஆசைகள், தேவைகளை குறைத்துக் கொண்டால் சுதந்திரமாக வாழலாம். * விதியை மாற்றும் சக்தி பிரார்த்தனைக்கு இருக்கிறது. * சொர்க்கத்தை அடைய விரும்பினால் பெற்றோரை சந்தோஷப்படுத்துங்கள். * தன்னை அறிந்த மனிதன் இறைவனை அறிந்தவன் ஆவான்.* சுகபோக நோக்கத்துடன் சேவையில் ஈடுபட்டால் அது களங்கத்தை உண்டாக்கும்.- நபிகள் நாயகம்