உள்ளூர் செய்திகள்

நியாயமாக சம்பாதியுங்கள்

பொருளை அநியாய வழியில் சேர்ப்பதை நபிகள்நாயகம் கண்டிக்கிறார்.* யாரேனும் அநியாயமாக மற்றொருவரின் ஒரு சாண் நிலத்தை அபகரித்தாலும், அவர் மறுமைநாளில் ஏழு பூமிக்கடியில் அழுத்தப்படுவார்.* எவர் வேலியைச்சுற்றி மேய்கிறாரோ, அவர் வேலிக்குள் விழுந்து விடக்கூடும்.* ஒருவர் அநியாயமாக பொருள் தேடி தர்மம் செய்தால் அதில் எந்த நற்கூலியும் இல்லை. அந்தப் பாவச் சுமையை அவரே தாங்கிக் கொள்கிறார்.* ஒருவன் அநியாயமான வழியில் சம்பாதித்த பொருளைக்கொண்டு வயிற்றை நிரப்பிக்கொண்டால், அதை ஹலாலான உணவைக்கொண்டு சுத்தம் செய்யாத வரை அவனுக்கு பாவமன்னிப்பே கிடையாது.* ஒருவன் அநியாயமாக சம்பாதித்த பொருளைக்கொண்டு ஆடை வாங்கி உடுத்தி தொழுகின்ற தொழுகை, அந்த ஆடை உடலில் இருந்து களையப்படும் வரை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.* அநியாயமாக சம்பாதித்த பொருளைக்கொண்டு ஒரு கவளம் உணவு வயிற்றை அடையுமானால் கூட அவனுடையை தொழுகையை அல்லாஹ் நாற்பது நாள் வரை ஏற்றுக் கொள்வதில்லை.* தேவைக்குப்போக மீதி பணத்தை சேர்த்து வைப்பவர்கள், தேவையில்லாத பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உங்களிடம் மிஞ்சும் பணத்தை தர்மம் செய்து விடுங்கள்.