இறைவனுக்கு பயந்தால் உங்களுக்கு பயமில்லை
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், இறைவனுக்கு அஞ்சுவது குறித்து உதிர்த்த பொன்மொழிகள் இவை.* மனிதனுக்கு மனிதன் பயப்பட வேண்டும்என்ற அவசியமில்லை. ஆனால், அல்லாஹ்விற்கு பயப்பட வேண்டும். அல்லாஹ் மீது கொண்ட பயத்தால் சிந்திய கண்ணீர் துளிகள், இறைவனின் பாதையில் சிந்திய செந்நீர் துளிகளாகும். இந்த இரண்டையும் விட, அல்லாஹ்விற்கு பிரியமானது வேறேதுமில்லை.* அறிவுகளுக்கு தலைமையானது இறையச்சம் (கடவுள் மீதான பயம்). இறையச்சத்தின் உதவியினாலேயே சகல ஞானங்களும் உண்டாகிறது. எவன் அல்லாஹ்விற்கு பயப்படவில்லையோ, அவனை எல்லாவற்றிற்கும் அல்லாஹ் பயப்படும்படி செய்து விடுவான். உலகில் எவனொருவன் தனக்கு பயப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றானோ, அவனுக்கு அல்லாஹ் மறுமை நாளில் பயந்து நடுங்கக்கூடிய நிலைமையை உண்டாக்குவான். ஆனால், இறைவனுக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் இறப்பிற்கு பின் பயப்பட வேண்டிய அவசியமே இருக்காது.