உள்ளூர் செய்திகள்

பெண்மையை போற்றுவோம்

பெண்ணின் பெருமை பற்றியும், அவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் தெரிந்து கொள்வோமா...* நன்மை தருபவர்கள் பெண்கள் மட்டுமே. நற்பண்புகள் நிறைந்த பெண்களைக் காட்டிலும் உயர்ந்தவர் உலகில் இல்லை. * உறவினர்களின் குடும்பத்தில் ஒழுக்கம் மிக்க பெண் ஏழையாக இருந்தாலும் அவரைத் திருமணம் செய்யுங்கள்.* பக்தியும், ஒழுக்கமும் உள்ள பெண்ணை மனைவியாக அடைவதை விட சிறந்த பாக்கியம் வேறில்லை. கணவரின் கருத்தை ஏற்பதோடு அவனை மீறி நடக்காதவளாகவும் அவள் இருப்பாள். *பெண்களைக் கண்ணியமாக நடத்துமாறு இறைவன் ஆணையிடுகிறான். ஏனெனில் அவர்களே அன்னையராகவும், அருமைப் புதல்வியாகவும், அத்தையாகவும் இருக்கின்றனர். * பெண்களின் மீது மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்தாதீர். முதலில் பார்க்கும் பார்வை இயல்பானது. ஆனால் இரண்டாம் முறை பெண்களின் மீது பார்வையைச் செலுத்துவதற்கு அனுமதி கிடையாது.. அது பெரும் பாவமாகும். * அந்நிய பெண்களை வீணே பார்த்து ஆசைப்படும் ஆண்கள், மற்ற ஆண்கள் தன்னைக் காணும் விதத்தில் அலங்காரம் செய்யும் பெண்கள் இறைவன் கோபத்தை ஏற்க வேண்டும்.