உள்ளூர் செய்திகள்

மவுனம் காப்போம்

* பேசுவது வெள்ளி என்றால் மவுனம் காப்பது தங்கமாகும்.* கடன் கொடுக்கல் வாங்கலில் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்.* பணவசதி இருந்தும் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லதல்ல.* கஞ்சன் சொர்க்கம் நுழைய மாட்டான்.* பசித்தவருக்கு உணவு அளிப்பவனை சொர்க்கம் தேடி வரும். * அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள். அப்போது மனதிலுள்ள பொறாமை அழியத் துவங்கும்.* தீயவர்களுடன் தோழமை கொள்ளாதீர்கள், அவர்கள் பாவமும் உங்கள் கணக்கில் சேரும். * நண்பர்களிடம் நல்லவர்களாக இருங்கள். அது இறைவனிடம் உங்களை நல்லவர்களாக்கும்.- பொன்மொழிகள்