வாழ்வு வசந்தமாகும்
UPDATED : அக் 04, 2022 | ADDED : அக் 04, 2022
* எண்ணம் துாய்மையானதாக இருந்தால் வாழ்வு வசந்தமாகும்.* குற்றமற்றவர் எங்கு சென்றாலும் சிறப்புறுவர். * யாரையும் கோபிக்காதீர். அவரால் கூட சில நன்மைகள் கிடைக்கலாம்.* ஒரு வேலையை என்னால் முடிக்க முடியும் என வாக்களிக்காதீர்கள்.* பின்னர் அதனை நிறைவேற்ற முடியாமல் சிரமப்படலாம்.* இறைவனின் பெயரை நினைப்பவர்களுக்கு தீங்கில்லை.* சட்டம், அதிகாரத்தால் செய்யமுடியாத செயலை இறைவன் செய்வான். * பிறரால் பரிகாசம் செய்யப்படுபவர் பட்டம் போல் உயர்வார். - பொன்மொழிகள்