பெற்றோரை நேசியுங்கள்
* பெற்றோருக்கு உதவும் பிள்ளைகளுக்கு வாழ்த்து உண்டாகட்டும். அவருடைய ஆயுளை இறைவன் அதிகப்படுத்துவான்.* பெற்றோரின் பிரியத்தில் தான் இறைவனின் பிரியமும் இருக்கிறது. பெற்றோர் கோபமாக இருந்தால் இறைவனும் கோபமாக இருப்பான்.* பரிசுத்தமான எண்ணங்களின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன.* பரிசுத்த எண்ணமில்லாத காரணத்தினால் எத்தனையோ பெரிய நன்மைகள் அற்ப செயல்களாகி விடுகின்றன.* உண்மை பேசுபவன் நன்மையின் பக்கம் செல்கிறான். நன்மை அவனை சொக்கத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறது.* பொய் சொல்பவன் பாவங் களின் பக்கம் செல்கிறான். பாவங்கள் அவனை நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறது.* கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை நம்மை நாசப்படுத்தும்.* கருணை உள்ளம் கொண்டவன் தங்குமிடம் சொர்க்கம். கஞ்சத்தனம் கொண்டவன் தங்குமிடம் நரகம்.- பொன்மொழிகள்