உள்ளூர் செய்திகள்

தாய்க்கு நிகரான சித்தி

நபிகள் நாயகம் சொல்லும் பொன்மொழிகள் சிலவற்றைக் கேளுங்கள்.* சிறிய தந்தை(தந்தையுடன் பிறந்தவர்) சிறிய தாய் (தாயுடன் பிறந்தவர்) இருவரும் பெற்ற தாய், தந்தைக்கு நிகரானவர்கள்.* குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்யக்கூடிய நற்செயல்களே அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமாக இருக்கும்.* வட்டி எவ்வளவு தான் வருமானத்தை பெருக்கினாலும் அதன் முடிவு குறைந்து போகக்கூடியதே. வட்டி வாங்கி அதனை உண்ணச்செய்பவன், அதன் கணக்கை எழுதுபவன், அதன் சாட்சியாளன் அனைவரும் பாவத்தில் சமமானவர்கள்.* வயது வந்த பெண் மக்களுக்கு திருமணம் செய்து வைப்பதில் விரைந்து கொள்ளுங்கள். வயதும், காலமும் வீணாகும் முன் நன்மையான செயல்களைச் செய்வதிலும் விரைந்து கொள்ளுங்கள்.* உங்களுக்கிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகளை சமாதானம் மூலம் தீர்த்துக் கொள்வதில் விரைந்து கொள்ளுங்கள். வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில் முந்திக் கொள்ளுங்கள்.