நிதானமே இறைவன் குணம்
UPDATED : டிச 14, 2018 | ADDED : டிச 14, 2018
* அழிவைத் தரும் அவசரம் மனிதனின் விரோதியாகும். நிதானம் இறைவன் குணமாகும்.* கெட்ட செயல் அனைத்திற்கும் திறவுகோல் கோபமேயாகும்.* அதிகமான பாவங்கள் நாவினால் தான் உண்டாகின்றன.* எவர் அதிகமாக வீண் பேச்சுக்கள் பேசுகிறாரோ அவர் ஏழ்மை நிலையை அடைவார்.* வீண் செலவும் ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள். தருமமும் செய்யுங்கள்.* பெருமைக்காக ஆடை அணிகின்றவருக்கு வாழ்வில் வறுமை உண்டாகும்.* பொருளுக்காக மட்டும் பேராசை கொண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.- நாயகம்