உள்ளூர் செய்திகள்

தொழுகையின் சிறப்பு

தொழுகை குறித்து மூன்று அருமையான கருத்துக்களை குர்ஆன் தந்துள்ளது.* திண்ணமாக, நான் தான் அல்லாஹ். என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே எனக்கு அடி பணிவீராக. என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நிறுத்துவீராக!* உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.* திண்ணமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீய செயல்களைத் தடுக்கின்றது.