உள்ளூர் செய்திகள்

இருக்கிறது ஒரு மந்திரம்

எல்லாம் வல்ல இறைவனை திக்ரு செய்பவரா (நினைவு கொள்பவர்) நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு பல சுகங்கள் தேடி வரும் என்பதில் ஐயமில்லை. நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்கள்.* எவர் நாற்பது நாட்கள் பரிசுத்தமான மனதுடன் அல்லாஹ்வை தியானம் புரிகின்றாரோ, அவரது இதயத்தில் இருந்து புறப்படும் ஞானஊற்று நாவின் வழியே வெளிப்படும்.* மெல்லிய பஞ்சணை படுக்கையில் படுத்துக் கொண்டே நினைவு கொள்பவர்களையும் அல்லாஹ் சொர்க்கத்தில் உன்னதமான ஸ்தானத்தில் நுழையச் செய்கின்றான்.* அல்லாஹ்வின் நினைவு இதயங்களின் அழுக்கைப் போக்குகின்றது. * அல்லாஹ்வை நினைவு கொள்பவனுக்கும், கொள்ளாதவனுக்கும் உரிய வேறுபாடு உயிர் உள்ளவனுக்கும், மரணித்தவனுக்கும் சமமானதாகும்.* காலை தொழுகைக்கு(சுப்ஹு) பின்னும், மாலை தொழுகைக்கு(மஃரிப்) பின்னும் அல்லாஹ்வை நினைப்பவருக்கு தண்டனை தர அல்லாஹ் வெட்கப்படுகின்றான். அவன் பாவியானாலும் சரியே!* அல்லாஹ்வை நினைவு கொள்பவரின் முகத்தில் பல விதமான ஒளிப்பிரகாசம் ஏற்படுகிறது.* இறைநினைவு இதயநோய்களுக்கு மருந்தாகும்.* அல்லாஹ்வை நினைவு கூர்பவர் மீது அல்லாஹ்வின் ஸலவாத்தும் (ஆசி) வானவர்களின் ஸலவாத்தும் (பிரார்த்தனை) ஏற்படுகின்றன.