உள்ளூர் செய்திகள்

யார் சிறந்தவர்

* மனிதன் தவறு செய்யக்கூடியவன். இருந்தாலும் தான் செய்த குற்றத்திற்காக பிராயச்சித்தம் தேடுபவனே சிறந்தவன். * கோபம் கொள்ளாதீர்கள். அதுவே மனம், உடல்நலத்திற்கு நல்லது. * பிறர் மீது பொறாமைப்படாதீர்கள். மீறினால் நெருப்பானது விறகைத் தின்பதை போல, பொறாமையானது உங்களது நற்செயல்களைத் தின்றுவிடும். * ஒருவரின் வியாபாரத்தில் இடையே புகுந்து வியாபாரம் செய்யாதீர்கள். * நல்லதை மட்டும் பேசுங்கள். இல்லையேல் அமைதியாக இருங்கள். -பொன்மொழிகள்