உள்ளூர் செய்திகள்

திருத்திய உள்ளம்

நபிகள் நாயகத்தின் போதனைகளால் மிருகங்களாக வாழ்க்கை நடத்தியவர்கள் மனிதர்களாக மாறினார்கள். பாவங்களை செய்தவர்கள் மகான்களாக உருவெடுத்தனர். எங்கும் அமைதி நிலவியது. மனிதர்களை மனிதர்களாகவே வாழச் செய்ய, இறைவன் ஒருலட்சத்து இருபத்து நான்கு ஆயிரம் நபிமார்களை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தான். இவர்களில் கடைசியாக வந்தவர்தான் நபிகள் நாயகம். இவர் 63 வயது வரை வாழ்ந்தாலும், மக்களுக்கு சேவை செய்து வந்தது 23 வருடங்கள்தான். இவ்வளவு குறுகிய காலத்தில் தனது கடைசி ஹஜ்ஜின் பொழுது பலரையும் திருத்தினார்.