நல்லதொரு குடும்பம்
UPDATED : அக் 15, 2023 | ADDED : அக் 15, 2023
நபிகள் நாயகம் ஒருமுறை தோழர்களிடம், ''மனிதன் பொக்கிஷமாக கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை அறிவிக்கட்டுமா'' எனக்கேட்டார். அதற்கு ஆவலுடன் அவரது முகத்தை பார்த்தனர். உடனே அவர், ''நல்ல பெண்ணே மிகச் சிறந்த பொக்கிஷம். அவள் கணவரின் குறிப்பறிந்து நடப்பாள். அவரது அன்புக்கட்டளைகளை ஏற்பாள்'' என்றார். இதுபோல் கணவரும், மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தால் குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக மாறும்தானே.