ஐந்தும் முக்கியம்
UPDATED : செப் 19, 2023 | ADDED : செப் 19, 2023
குர்ஆனில் ஐந்து விஷயங்கள் உள்ளன. 1. ஹலால் (அனுமதிக்கப்பட்டது)2. ஹராம் (விலக்கப்பட்டது)3. முஹ்கம் (தெளிவான மொழிநடை கொண்ட வசனங்கள்)4. முதஷாபிஹாத் (மறைவான விஷயங்களான சுவர்க்கம், நரகம், அர்ஷ் போன்றவற்றை விளக்கும் வசனங்கள்)5. உதாரணங்கள் அனுமதிக்கப்பட்டதை ஹலாலாகவும், விலக்கப்பட்டதை ஹராமாகவும் கருதுங்கள். குர்ஆனில் கொள்கைகளும் சட்டங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ள வசனங்களான முஹ்கமின்படி செயல்படுங்கள். மறைவான விஷயங்களான சுவர்க்கம், நரகம், அர்ஷ் போன்றவற்றை உவமானமாகக் குர்ஆன் எடுத்துரைக்கும் வசனங்களான முதஷாபிஹின் மீது நம்பிக்கை வையுங்கள். அதனைத் துருவி ஆராய்வதில் ஈடுபடாதீர்கள். முந்தைய சமுதாயங்களின் வரலாறுகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.