துாங்காதீர்கள்
UPDATED : செப் 27, 2024 | ADDED : செப் 27, 2024
துாங்கும் நேரத்தில் கனவு வருகிறது. அதில் தோன்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப இன்பம், துன்பத்தை மனிதன் அடைகிறான். பின் விழிப்பு வந்த பிறகே உண்மை புரியும். அது போலவே இந்த பிறவியில் கடமையைச் செய்யாமல் துாங்குபவர்கள் இன்பத்தை மட்டுமே பெரிதாக கருதுகிறார்கள். இது அறிவீனம். மரணம் நெருங்குவதற்குள் மறுமைக்கு தேவையான நற்செயல்களில் ஈடுபடுவது அவசியம்.